28.2 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Spiritual Astrology எந்தெந்த ராசியினர் இயற்கையாகவே மற்றவர்களின் மனதை வசீகரிக்கும் தன்மை கொண்டவர்கள் தெரியுமா?

எந்தெந்த ராசியினர் இயற்கையாகவே மற்றவர்களின் மனதை வசீகரிக்கும் தன்மை கொண்டவர்கள் தெரியுமா?

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை கவர எதுவும் செயற்கையாக செய்ய வேண்டிய அவசியமே இல்லை.அவர்களின் குணம் இயல்பாகவே அனைவரையும் காந்தம் போல் ஈர்த்துவிடுமாம்.

எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்களின் மனதை வசீகரிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களை எதிர்ப்பது கடினம்.ஏனென்றால் அவர்கள் நேர்மறையாகவும், ஆக்கபூர்வமானவும்,வேடிக்கையானவர்களாகவும் இருப்பார்கள்.அவர்களின் சாகச உணர்வும்,கட்டுப்பாடில்லாமல் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள்.இவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அனைத்து வழிகளிலும் முயற்சி செய்வார்கள்.இறுதியில் வெற்றியும் அடைவார்கள்.நேர்மையாக இருப்பதால் இவர்களை பிடிக்காதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மந்தமான தருணம் என்பதே இருக்காது. எப்போதும் துடிப்புடனே இருப்பார்கள்.வேடிக்கையான இவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும்போது புத்திசாலித்தனமான விஷயங்களை செய்து விடுவார்கள். சொல்லப்போனால் இவர்கள் அருகில் இருக்கும்போது அனைத்தும் வேடிக்கையாகவே இருக்கும்.இப்படி இருப்பதால் அனைவரையும் இவர்கள் கவர்ந்து விடுவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எவரையும் தங்களின் ஆற்றலால் ஆச்சரியப்படுத்தக் கூடியவர்கள். இவர்களின் அதீத தன்னம்பிக்கை சுற்றியிருப்பவர்களின் தைரியமாய் இருக்கச் செய்யும்.இவர்களின் மந்திர நம்பிக்கை அனைவருக்குள்ளும் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.இவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக உணர வைப்பார்கள்.இவர்களின் ஆளுமை,இரக்ககுணம்,தாராள மனப்பான்மை இவர்களை அனைவருக்கும் பிடிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கற்பனைக்கு எட்டாத நகைச்சுவை உணர்வும், தாராளமனப்பான்மையும்,எதையும் வெளிப்படையான பேசும் மனது கொண்டவர்கள்.இவர்களை பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்து விடும்.அவர்களின் பேச்சு அனைவருக்கும் உற்சாகம் கொடுக்கும்.தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடுவார்கள். இவர்கள் அருகில் இருப்பது உலகமே அருகில் இருப்பது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவதால் எல்லோரின் மனங்களை தனுசுகாரர்கள் கொள்ளையடித்துவிடுவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அனைவரையும் ஈர்க்கும் சில குணங்கள் இவர்களிடம் இருக்கும். இவர்கள் அனைவரையும் ஒன்றாக வைத்திருக்க நினைப்பார்களாக இருப்பார்கள். யாரையும் தவறாக நினைக்க மாட்டார்கள்.அனைவரிடமும் ஒரே மாதிரியாக இருப்பார்கள்.மேலும் அவர்களின் சிந்திக்கும் ஆற்றலும்,ஆக்கபூர்வமான திறனும் அனைவரையும் இவர்கள் பக்கம் இழுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் வாதாடவும்,ஆதரவாகவும் இருப்பார்கள். இவர்களை போன்ற நம்பிக்கைக்குரிய,விசுவாசமான நண்பர்களை யாருக்குத்தான் பிடிக்காது.தீயகுணம் இன்றி நேர்மையாக தனுகாரர்கள் இருப்பவார்கள்.இவர்களின் அணுகுமுறை எப்போதும் மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கும்.வசீகரமான பல விஷங்கள் இவர்களிடம் இருப்பதால் அனைவரும் இவர்களை விரும்புவார்கள்.

 

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments