27.9 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News பிறந்த குழந்தைகளை நினைத்து அச்சமடையும் நாடு!

பிறந்த குழந்தைகளை நினைத்து அச்சமடையும் நாடு!

முடக்கநிலையால், உக்ரேனிய வாடகை தாய்மார்களுக்கு பிறந்த 40இற்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளிலேயே சிக்கியுள்ளதாக, உக்ரேனிய நாடாளுமன்றத்தின் மனித உரிமை குறைகேள் அதிகாரி லியுட்மிலா டெனிசோவா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, உக்ரேனில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையின் ஒரு பகுதியாக, நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் வெளிநாட்டில் தத்தெடுக்கும் பெற்றோருடன் குழந்தைகள் சேர முடியாத நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடயத்திற்கு விரைந்து தீர்மானம் எடுக்க நாட்டின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் லியுட்மிலா டெனிசோவா குறிப்பிட்டுள்ளார்.

கியோவில் உள்ள ஹோட்டல் வெனிஸில் 46 குழந்தைகள் தற்போது பயோடெக்ஸ் காம் மருத்துவமனையின் பராமரிப்பில் இருப்பதாக இணையத்தில் வெளியான காணொளியில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த குழந்தைகளை தத்தெடுக்கவுள்ளதாக பயோடெக்ஸ் காம் மருத்துவமனை தெரிவித்துள்ள்து.

Day of the National Flag (Ukraine) - Wikipedia

பயோடெக்ஸ் காம் வழக்கறிஞர் டெனிஸ் ஹெர்மன் இதுகுறித்து கூறுகையில், ‘மற்ற நாடுகளின் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம், மேலும் குடிமக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஐக்கியமாக இருக்க அனுமதிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

உக்ரேனில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 17,858பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 497பேர் உயிரிழந்துள்ளனர்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments