28.2 C
Jaffna
Friday, September 18, 2020
Home News வரலாறு படைக்க காத்திருக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர்!

வரலாறு படைக்க காத்திருக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர்!

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் என நான்கு பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதன் மூலம் ராஜபக்சவினர் ஸ்ரீலங்கா அரசியலில் சாதனை ஒன்றை படைக்க தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதுடன் அவரது மூத்த புதல்வர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரரான அமைச்சர் சமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டையில் போட்டியிட உள்ளதுடன் அவரது புதல்வரும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஷசீந்திர ராஜபக்ச மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

இவர்கள் நால்வரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால், இலங்கை நாடாளுமன்றத்தில் இரு ஜோடி தந்தை மற்றும் மகன்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் முறை என வரலாற்றில் பதியப்படும்.

இதற்கு முன்னர் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒரே நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த போதிலும் மேற்கூறிய பிரதிநிதித்துவத்தை போன்று இருந்ததில்லை.

இதனை தவிர ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். அத்துடன் அவரது சகோதரான மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் முக்கிய அமைச்சு பதவிகளையும் வகித்து வருகிறார். அவரது மூத்த சகோதரான சமல் ராஜபக்ச அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சராவார்.

இந்த நிலையில் அடுத்த புதிய நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபச்ச, சமல் ராஜபச்ச, நிருபமா ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.

ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதால், அடுத்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பை வகிப்பார் எனக் கூறப்படுகிறது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments