29 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia சொந்த ஊருக்கு புறப்படும் வழியில் நண்பரின் மடியில் மரணமடைந்த நபர்!

சொந்த ஊருக்கு புறப்படும் வழியில் நண்பரின் மடியில் மரணமடைந்த நபர்!

இந்தியாவில் ஊரடங்கால் வேலையை இழந்து, சொந்த ஊருக்கு புறப்படும் வழியில் நண்பரின் மடியில் மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாகூப் முகமது மற்றும் அம்ரித் குமார். பிழைப்புக்காக குஜராத் மாநிலம் சூரத் நகரில் சென்றுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தியுள்ள ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பை இருவரும் இழந்துள்ளனர்.

கையில் இருந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியதையடுத்து இருவரும் சொந்த ஊருக்கு புறப்பட முடிவு செய்துள்ளனர்.

ஒரு லொறியில் 4,000 ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டுள்ளனர். அதிக கூட்டம் இருந்ததால் உட்கார இடமின்றி இருவரும் நின்றுகொண்டே பயணமாகியுள்ளனர்.

இருவரும் பயணம் செய்த லொறியானது மத்தியப்பிரதேச தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது அம்ரித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியது. அம்ரித்துக்கு கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என யாகூப் பயந்தார்.

அந்த வாகனத்தில் இருந்த அனைவருக்கும் அதே அச்சம்.அதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கிவிட முடிவு செய்தனர்.

வேறுவழியின்றி தன் நண்பனுடன் யாகூப் லொறியைவிட்டு இறங்கினார். வண்டியை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில் அம்ரித் மயக்கமடைந்துள்ளார்.

தன் நண்பனை மடியில் சாய்த்துக்கொண்டு சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.வாகனத்தில் சென்றவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

கொளுத்தும் வெயிலில் தன் நண்பனை மடியில் படுக்க வைத்துக்கொண்டு யாகூப் சாலையில் அமர்ந்திருந்தார்.இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.உள்ளூர் மக்களின் உதவியுடன் மாவட்ட மருத்துவமனைக்கு அம்ரித்தை கொண்டுசென்றனர்.

அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து உடனடியாக செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.

ஆனால்,சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி அம்ரித் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நண்பனை மடியில் கிடத்தியவாறே யாகூப், உதவிகேட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments