28.5 C
Jaffna
Thursday, September 24, 2020
Home News Asia அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!

அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!

அரசு நிறுவனங்களை அரசியல் மயமாக்க தான் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அரசாங்கம் அவசியமான வருமானத்தை உருவாக்க வேண்டும்,செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும்,செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடுமையாக உழைக்கும் பொது மக்களின் பணத்தின் மூலமே அரச நிறுவனங்கள் இயங்குகின்றன.எனவே அவ்வாறான நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விட கூடாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஏனைய நாடுகள் போன்று இலங்கையிலும் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.நிலவும் நிலைமைக்கு மத்தியில் நிறுவனங்களின் பிரதானிகள் நாடு குறித்து சிந்தித்து செயற்ட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments