28.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News Asia இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லவுள்ள இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்கு மாத்திரம் அனுமதியை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறும்.

அதன் பிரகாரம் பணியகத்தின் பிரதான காரியாலயம், மாகாண மற்றும் மாவட்ட காரியாலயங்களில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்து, வந்திருப்பவர்கள் மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்படும்.

தொழிலுக்காக செல்பவர்களிடம் பணியகத்தினால் சாதாரணமாக கோரப்படும் ஆவணங்களுக்கு மேலதிகமாக, தென் கொரியா, ஜப்பான், கனடா, ஜேர்மன் போன்ற நாடுகளின் தொழில் தருணர்கள், அவர்கள் அழைத்துக்கொள்ளும் இலங்கையர்கள் அந்த நாடுகளில் தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக அனுப்பப்படும் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்.

அத்துடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு செல்வதற்கான பதிவுகள் எதிர்வரும் நாட்களில் ஆம்பிக்கப்படும்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலங்கையும் இலக்கானதால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் மார்ச் 13ம் திகதி நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments