27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Lifestyle பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்!

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்!

பேரீச்சம்பழத்தில் புரதச்சத்து, நார்ச்சத்து,கல்சியம்,மாங்கனீசு,பொட்டாசியம், தாமிரம்,மக்னீசியம், இரும்புச்சத்து, விட்டமின் -A,விட்டமின் -B,விட்டமின் -E, விட்டமின் -B2,விட்டமின் -,B5 போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் குளுக்கோஸ்,பிரக்டோஸ்,சுக்ரோஸ் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

  1. முதியவர்களுக்கு உண்டாகும் கை,கால் மூட்டு வலி போன்றவற்றை இந்த பேரீச்சம் பழம் குணப்படுத்துகிறது.
  2. பேரீச்சம் பழத்தில் நிறைய விட்டமின் A,B இருப்பதால்,இவை சருமத்தை மிருதுவாக்கி,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் தழும்புகள் மறைவதற்கு பயன்படுகிறது.
  3. சளி,இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சிய பின் அதை குடித்து வந்தால் குணமாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தை மற்றும் தாய் நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.
  4. மாலைக்கண் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துகளும் கிடைத்து கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
  5. மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாத விலக்கை நிவர்த்தி செய்ய பேரீச்சம் பழம் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
  6. ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  7. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை பேரீச்சம் பழத்தில் இருப்பதால்,இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
  8. பேரீச்சம் பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் C,B6 போன்றவை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்து ரத்த சோகை பிரச்சனையை தீர்க்கிறது.
  9. உடலின் எடையை அதிகரிக்க தினமும் காலையில் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதால்,அப்பழத்தில் இருக்கும் விட்டமின் மற்றும் புரதம் போன்றவை உடல் எடையினை அதிகரிக்கச் செய்கிறது.
  10. தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments