27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு போர் குறித்து கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு போர் குறித்து கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை ஒரு அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையைத் தொடர வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் ஆகின்ற நிலையில்,கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியமானது.

இந்நிலையில், இலங்கை அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையைத் தொடர வேண்டும் என நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இலங்கை அரசாங்கத்திற்கும் நீதி,நல்லிணக்கம் மற்றும் சேர்ப்பதற்கும் உழைக்கும் அனைவருக்கும் தொடர்ந்து கனடா அரசு தனது ஆதரவை வழங்கி வருகிறது,இவை அனைத்தும் நாட்டில் நீண்டகால அமைதி மற்றும் செழிப்புக்கு உறுதுணையாகின்றன.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 11வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் போது,​​எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள்,அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் உள்ளன.

கடந்த 11 ஆண்டுகளில்,இந்த போரினால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பல கனடியர்களை நான் சந்தித்தேன்.

கணக்கிடமுடியாத இழப்பு,மிகப்பெரிய துன்பம் மற்றும் தொடர்ச்சியான பின்னடைவு பற்றிய அவர்களின் கதைகள் நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகின்றன.”என தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments