28.3 C
Jaffna
Sunday, September 20, 2020
Home News Asia முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

புதிய நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இன்று பொது தேர்தல் தொடர்பில் பிரதானமாக பேசப்படுகின்றது.உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணைகளும் இடம்பெறுகின்றன.நாடாளுமன்றத்தின் முக்கியத்துவம் தொடர்பில் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடாளுமன்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. பொருளாதார,அரசியல் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இந்நிலையில்,சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய,பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவது அவசியமாகும்.

அவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்படாது தாமதமாகும் பொழுது பிரச்சினைகள் அதிகரிக்கும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற வகையில் பொதுத்தேர்தலுக்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு போட்டியிடவுள்ளோம்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறும் வகையில் வெற்றி பெறுவதே தமது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments