28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News Asia அடுத்த வாரமளவில் ஹோட்டல்கள்,உணவகங்களை திறக்க கோரிக்கை!

அடுத்த வாரமளவில் ஹோட்டல்கள்,உணவகங்களை திறக்க கோரிக்கை!

கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள்,உணவக உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் சேவைகளை வழங்கும் பிற தொழில்முனைவோர் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள்,சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் சுற்றுலா ஹோட்டல்களை மீண்டும் திறப்பதற்கு இதன்போது ஒப்புக்கொண்டனர்.

இதன்போது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை மீள திறக்க உலக சுகாதார ஸ்தாபனம் முன்னதாகவே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் கீழ் ஹோட்டல் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க ஒரு திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்றும், உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments