28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home News Asia முன்னாள் காதலனை பழிவாங்க ஒரு டொன் வெங்காயத்தை அனுப்பி வைத்த காதலி!

முன்னாள் காதலனை பழிவாங்க ஒரு டொன் வெங்காயத்தை அனுப்பி வைத்த காதலி!

சீனாவில் இன்று (மே 20) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழ வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்த சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்துள்ளார்.தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்.ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்தபோது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுதும் உள்ளார்.

இந்த நிலையில்,காதலர் இந்த பிரிவுக்கு வேதனைப் படவில்லை என்பது நண்பர்கள் மூலம் தெரியவர,ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

உடனே 1000 கிலோ வெங்காயத்தை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் அந்த இளம்பெண்.அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார் அவர். அந்த கடிதத்தில்,‘‘நான் மூன்று நாட்கள் அழுதேன்,இப்போது உன்னுடைய முறை’’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஜாவோவின் காதலர் வெங்காயத்தைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையி்ல்,ஜாவோவின் முன்னாள் காதலன் தனது முன்னாள் காதலியை வித்தியாசமானவர் என்று கூறினாலும்,நான் அழாததற்காக நான் ஒரு மோசமான மனிதனா?என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதேவேளை,அக்கம்பக்கத்தினர் வெங்காயம் அழுகி துர்நாற்றம் வீசுவதாகக் காதலன் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments