27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News Asia சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள அறிவித்தல்!

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள அறிவித்தல்!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள திருமணங்கள்,இறுதிச் சடங்குகள் மற்றும் விருந்துகளின் போது விருந்தினர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமகாலத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் கூட்டங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்த நிலையில் பணியிடங்களுக்கான செயற்பாட்டு வழிகாட்டுதல்களை பட்டியலிடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் முகமூடி அணிந்து ஒரு மீட்டர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியதுடன், கட்டிப்பிடிப்பதும் கைகுலுக்குவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்வு மண்டபங்களுக்குள் நுழையும் அனைத்து விருந்தினர்களின் உடல் வெப்ப நிலையையும் சரிபார்க்க வேண்டும் எனவும் மண்டபத்தில் காற்றோட்டம் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளுக்கு வரும் விருந்தினர்கள் பாத்திரங்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அங்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments