28.4 C
Jaffna
Wednesday, July 15, 2020
Home News Asia தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள முடிவு!

தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள முடிவு!

பெரும் சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது என அறியமுடிந்தது.

மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் திகதியில் மாற்றம் ஏற்படும் என ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எந்தவித சாத்தியமும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மேலும் 70 நாட்கள் தமக்குத் தேவைப்படுவதால் செப்டெம்பர் மாதம் வரையில் தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர்.

எனினும், நாடாளுமன்றக் கலைப்பு, பொதுத்தேர்தல் திகதி ஆகிய வர்த்தமானிகளை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணையின் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் இது குறித்து வெளிப்படையான இறுதி முடிவு ஒன்றை எடுப்பது எனவும் இன்றைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. வழமைபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் iPhone 12 கைப்பேசிகள் தொடர்பான சில...

பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது.இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது. முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது.கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான...

காதல் ஆறு வகை – அதில் உங்கள் காதல் எந்தவகை?

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது.காதலுடன் `அவனும்,அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள்.பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை.கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,குட்டிக்கரணம் அடிப்பது,கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக்...

பட்லருக்கு இன்னும் வாய்ப்புக்கள் கொடுக்கபட வேண்டும்!

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.அந்த அணியில் பேர்ஸ்டோவும்...

Recent Comments