28.4 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர்!கமெராவில் சிக்கிய துயர காட்சி!

இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர்!கமெராவில் சிக்கிய துயர காட்சி!

இந்தியாவில் நபர் ஒருவர் பசிக் கொடுமை தாங்க முடியாமல்,சாலையில் அடிபட்டு கிடந்த நாயின் சடலத்தை சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமுலில் உள்ளது.

சில தளர்வுகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டாலும்,புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு காரணமாக கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில்,நாய் ஒன்று விபத்தின் காரணமாக அடிபட்டு சாலையில் இறந்து கிடக்கிறது.அதை நபர் ஒருவர் பசி தாங்க முடியாமல் அந்த நாயின் சடலத்தை சாப்பிடுகிறார்.

அப்போது அந்த வழியே சென்ற நபர் ஒருவர் குறித்த நபரை அதை சாப்பிடாதே என்று கூறியும்,அவர் தொடர்ந்து சாப்பிட முயற்சி செய்ய, உடனே சாப்பாடு மற்றும் தண்ணீரை அவருக்கு கொடுக்கிறார்.

இதையடுத்து அந்த நபர் அந்த சாப்பாடு மற்றும் தண்ணீரை குடிக்கிறார்.

இந்த ஊரடங்கு காரணமாக பல லட்சம் குடும்பங்கள் ஏழ்மையில் சிக்கி தவிக்கும், ஏராளமானோர் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இறப்பார் என்று புள்ளி விவரங்கள் கூறி வரும் நிலையில்,இப்படி ஒரு சம்பவம் அதற்கு உதாரணமகா நடந்துள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments