28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home News லண்டனில் எத்தனை சதவீத மக்களுக்கு கொரோனா பாதிப்பு தெரியுமா?

லண்டனில் எத்தனை சதவீத மக்களுக்கு கொரோனா பாதிப்பு தெரியுமா?

லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

வெளியான புதிய தரவுகள் அடிப்படையில் லண்டனில் 17 சதவீத மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இது மொத்த சனத்தொகையில் 1.53 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மொத்த இங்கிலாந்தில் இந்த எண்ணிக்கை 5 சதவீதம் எனவும், சுமார் 2.85 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர் என அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

லண்டனில் 17 சதவீதம் பேர் கொரோனாவுக்கு இலக்காகியிருந்தும், இறப்பு வீதம் மிகவும் குறைவு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லண்டனை பொறுத்தமட்டில், இங்குள்ள மக்கள் சராசரியாக இளைஞர்கள் எனவும், கொரோனா வயதானவர்களுக்கே ஆபத்தானது என நிபுணர் ஒருவர் குறித்த ஆய்வறிக்கை தொடர்பில் தெரிவித்துள்ளார்.

தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்திலிருந்து வெளியான தனி தரவுகளின் அடிப்படையில், மக்கள் தொகையில் 0.25 சதவீதம் பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வாரத்திற்கு 61,000 பேர் – ஒவ்வொரு நாளும் சராசரியாக 8,700 பேர் இன்னமும் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி வருவதாகவும் இது காட்டுகிறது.

மேலும் இந்த ஆய்வுகளின்படி கொரோனாவுக்கு இலக்காகும் 12 பேரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் 697 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனில், இது அந்த 8,700 எண்ணிக்கையில் 8 சதவீதம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments