28.2 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Spiritual Astrology 12 ராசியில் எந்த ராசியினர் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி வாய்ந்தவர்கலாம்!

12 ராசியில் எந்த ராசியினர் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி வாய்ந்தவர்கலாம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டுமே பணம் பண்ணும் சக்தி படைத்தவர்கள்.அந்தவகையில் தற்போது பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி எந்த ராசிக்கு இருக்கின்றது என்று இங்கு பார்ப்போம்.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் கடமையை சரியாக செய்வார்கள்.பலனை அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள்.

தர்மத்தின் வழியிலும் நியாயமாகவும் பணத்தை சம்பாதிப்பார்கள்.அதிகம் கடன் வாங்க மாட்டார்கள்.பணம் இவர்களை தேடி வரும்.

ரிஷபம்

பணத்தின் அதிபதி,சுகபோகத்தின் அதிபதி சுக்கிரன்.இந்த கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் பணத்தை ஈர்ப்பதில் கெட்டிக்காரர்கள்.

பணம்தான் குறிக்கோள்,லட்சியம் என ஒடி ஓடி சம்பாதிப்பார்கள்.இவர்கள் இருக்கும் இடத்தில் பணம் இருக்கும்.பணம் இருக்கும் இடத்தில் இவர்கள் இருப்பார்கள்.எத்தனை லட்சம் கடன் வாங்கினாலும் எளிதில் அடைத்து விடுவார்கள்.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களும் பணம் எல்லாம் பெரிய விசயமே இல்லை.நிறைய கடன் வாங்கி செலவு செய்வார்கள்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்கள் பல வழிகளில் பணம் சம்பாதிப்பார்கள்.வரவுக்கு மேல் செலவு செய்ய மாட்டார்கள்.யாருக்கும் கடன் அதிகமாக கொடுக்க மாட்டார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களும் பணம் சம்பாதிக்கம் சூட்சமம் தெரியும்.தனித்துவமாக பணம் சம்பாதிப்பார்கள்.கடன் வாங்கிய பணத்தை கொண்டே சம்பாதித்து அந்த கடனை அடைத்து விடும் கெட்டிக்காரர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்.வீண் செலவு செய்ய மாட்டார்கள்.கடன் வாங்க மாட்டார்கள் அப்படி கடன் வாங்கி விட்டால் அதை கட்டும் வரை தூங்க மாட்டார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நல்ல வியாபாரிகள்.பணம் பண்ண தெரிந்த அளவிற்கு சேமிக்க தெரியாது.செலவு செய்வதில் மன்னர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பணம் பண்ணுவதில் கெட்டிக்காரர்கள்.பணத்தின் மீது பற்றும் நேசமும் கொண்டவர்கள்.வியாபாரத்தில் கெட்டிக்காரர்கள்.

காலையில் 10 ரூபாய்க்கு வாங்கியதை மாலையில் 100 ரூபாய்க்கு விற்று விடுவார்கள்.அதே நேரத்தில் சேமிக்க தெரியாது.

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பணம் பெரிய விசயமே இல்லை.பணத்தின் மீது பற்றற்றவர்கள்.நேர்மையாக சம்பாதிப்பார்கள்.கடன் வாங்கினால் நேர்மையாக கட்டிவிடுவார்கள்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு பணம் பண்ணுவதுதான் குறிக்கோள்.சாப்பாடு தூக்கம் இன்றி கூட பணத்தை சம்பாதிப்பார்கள்.

பணத்தின் மீது அதிக பற்று கொண்ட இவர்களுக்கு வட்டியில்லாமல் கைமாற்றாக பணம் தர பலர் தயாராக இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் சூட்சமம் தெரிந்திருக்கும்.பணம் சம்பாதிப்பதில் வெற்றிகரமானவராக இருந்தாலும் கடனை கட்ட முடியாமல் தவிப்பார்கள்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்.வீண் செலவு செய்ய மாட்டார்கள்.யாரிடமும் எளிதில் கைமாற்றாக பணம் கடன் வாங்குவதில் சமர்த்தர்கள்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments