28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home News Europe பிரித்தானியாவுக்கு வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவுக்கு வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவுக்கு வருகை தரும் சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தத் தவறினால்,அவர்களுக்கு 1,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரித்தானியா அரசாங்கம் இதற்கான அறிவிப்பை விரையில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவின் புதிய தனிமைப்படுத்தல் திட்டத்தின் பகுதியாக,அனைத்து சர்வதேச பயணிகளும் தங்களை தொடர்பு கொள்ளும் தகவலுடன் படிவத்தை நிரப்புமாறு கேட்கப்படுவார்கள்.

விமானம்,படகு அல்லது ரயில் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் எந்தவொரு பயணிகளும்,அவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்படும் முகவரியை நாட்டின் எல்லைப் படை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.இல்லையெனில் தனிமைப்படுத்த தங்குமிடம் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும்.

இதன் விளைவாக,சர்வதேச பயணிகள் தனிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதைச் சரிபார்க்க சுகாதார அதிகாரிகள் தனியார் முகவரிகளில் உடனடி சோதனைகளை மேற்கொள்ள முடியும்.புதிய விதிகள் அடுத்த மாதம் வரை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments