28.4 C
Jaffna
Wednesday, July 15, 2020
Home News Asia யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!-இரண்டாம் கட்ட நிதித் தொகை

யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!-இரண்டாம் கட்ட நிதித் தொகை

யாழ்.மாவட்டத்தில் முதலாம் கட்ட 5000 ரூபாய் உதவி பணத்தினை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட நிதி வழங்கப்படும்.

பொது மக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக அரசினால் வழங்கப்படும் இடர் நிதியினை யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும்,ஏப்ரல் மாத உதவித் தொகையினை பெற்ற 135,113 குடும்பங்களுக்கு இரண்டாம்கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை கட்டாயமாக வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

யாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக 135,113 குடும்பங்களிற்கு 5000 ரூபா உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ் உதவித்தொகை 76,032 சமுர்த்தி பயனாளிகள் 11,000 சமுர்த்தி உதவி பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் 39,473 தொழிலற்றவர்கள் மற்றும் 8,608 மேன்முறையீடுகள் மூலம் இணைக்கப்பட்டோர் உள்ள குடும்பத்தினர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டமாக உதவித்தொகை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட உதவித் தொகை (18.5.2020) தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றது.

இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு கட்டாயம் வழங்கப்படும் எனவே இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

அரசினால் வழங்கப்படும் நிதி வழங்கலில் உள்ள தாமதத்தின் காரணமாக மக்களிற்கு குறித்த உதவி தொகையினை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது எனினும் அது கிராமமாக அனைவருக்கும் வழங்கப்படும்

தங்களுடைய பிரதேச சமுத்தி உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொது மக்கள் இரண்டாம் கட்ட கொடுப்பனவை பெற்றுகொள்ளமுடியும் என பணிப்பாளர் தெரிவித்தார்.

0 Reviews

Most Popular

iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. வழமைபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் iPhone 12 கைப்பேசிகள் தொடர்பான சில...

பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது.இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது. முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது.கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான...

காதல் ஆறு வகை – அதில் உங்கள் காதல் எந்தவகை?

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது.காதலுடன் `அவனும்,அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள்.பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை.கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,குட்டிக்கரணம் அடிப்பது,கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக்...

பட்லருக்கு இன்னும் வாய்ப்புக்கள் கொடுக்கபட வேண்டும்!

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.அந்த அணியில் பேர்ஸ்டோவும்...

Recent Comments