27.5 C
Jaffna
Thursday, September 24, 2020
Home Lifestyle Home Garden கோழி முட்டை அடை வைப்பது எப்படி!

கோழி முட்டை அடை வைப்பது எப்படி!

கோழி வகைகளில் இரண்டு வகையாக உள்ளது.ஒன்று பெறுவடை,மற்றொன்று சிறுவடை என பிரிக்கப்பட்டுள்ளது.சாதரணமாக 8 முதல் 20 முட்டை அளவிற்கு முட்டையிட கூடிய தன்மை கோழிக்கு உள்ளது.கோழி அதனுடைய தன்மைக்கு ஏற்றவாறு முட்டை இடும்.சரி வாங்க கோழி முட்டை அடை வைக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!

முட்டை அடை வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • வர மிளகாய்
  • ஆணி துண்டு
  • அடுப்பு கறித்துண்டு
  • தண்ணீர்
  • மணல் அல்லது வைக்கோல்

கோழி முட்டையிடும் வகை:

  • கோழிகளில் சிறுவடை,பெறுவடை என்று வகையான கோழிகள் உள்ளன.அதில் சிறுவடை கோழியானது 18 முட்டை முதல் 20 முட்டை வரை இடும் தன்மை உடையது.
  • பெறுவடை கோழியானது 8 முதல் 14 முட்டை அளவிற்கு முட்டையிடும் தன்மை பெற்றுள்ளது.

முட்டை அடை வைக்கும் முறை:

  • இப்போது தண்ணீரில் அடை வைக்க போகும் கோழியின் முட்டையை போடவும்.அடை வைப்பதற்கு தகுதியுள்ள முட்டை நீரின் கீழ் இருக்கும்.அடை வைக்க முடியாத முட்டை அதாவது ரொம்ப பழைய முட்டையானது தண்ணீருக்கு மேல் வந்து விடும்.
  • பழைய முட்டையை அடை வைப்பதினால் எல்லா முட்டையுடன் இந்த பழைய முட்டை பொறித்து வராது.இதனால் கோழி அந்த முட்டையில் 20 நாட்கள் முழுமையாக அடை காத்து வராது.
  • இப்போது தண்ணீரில் போட்ட முட்டையை முட்டையில் நீர் இல்லாத அளவிற்கு நன்றாக துடைத்து அடை வைக்க போகும் கோழி கூடையில் வைக்க வேண்டும்.முட்டை அடை வைக்கும் போது கோழி வெளியில் சென்று வரும் அளவிற்கு கூடையானது இருக்க வேண்டும்.

கோழிக்கு அடை நேரத்தில் உணவு அவசியம்:

அடை இருக்கும் காலத்தில் கோழிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்கும்.கோழிக்கு இந்த நேரத்தில் உணவு வகையான தீனி,தண்ணீர் ரொம்பவே முக்கியமாக வைக்க வேண்டும்.

அடையின் காலத்தில் இடமாற்றம்:

  • இந்த உணவுகளை கோழியானது 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறைதான் எடுத்துக்கொள்ளும்.கோழியின் அடை இடத்தை மாற்றி வைத்தால் கோழி அடைக்கு வராமல் சென்றுவிடும்.
  • அடை இடத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அதை பகல் நேரத்தில் செய்யாமல் இரவு நேரங்களில் செய்து கோழியை கூடையினால் மூடி வைக்கவும்.அடுத்த நாள் அதே இடத்தில் கோழி அடை காக்கும்.

கால நிலை:

  • வெயில் காலத்தின் போது நாம் கோழியை அடை வைக்கும் போது தவறாமல் குளிர்ந்த நிலையில் இருக்கும் இடத்தில்தான் அடை வைக்க வேண்டும்.குளிர்ந்த நிலையில் இருந்தால் கோழியானது நன்கு அடை காத்து வரும்.
  • வெப்ப நிலையில் இருக்கும் போது அடை கோழி சூடு தாங்காமல் வெளியில் சென்று அடையை ஒழுங்காக காத்து வராது.

முட்டை பொறிக்கும் திறன்:

  • சிறுவடை கோழிக்கு முட்டை பொரிக்கும் திறன் அதிகமாவே இருக்கின்றது.சாதாரணமாக ஒரு கோழிக்கு 15 முதல் 18 முட்டை வரை அடை வைக்கலாம்.அதுமட்டும் இல்லாமல் வேற கோழியின் முட்டையை கூட அடை வைக்க போகும் கோழியோடு சேர்த்து அடை வைக்கலாம்.
  • அடை வைத்த கோழி முட்டையானது ஒவ்வொன்றாக தான் பொறித்து வரும்.வேற கோழியின் முட்டையை அடை வைத்து பொறித்து வரும்போது இரவு நேரத்தில் பொறுமையாக எடுத்து வெளியில் விடவேண்டும்.வெளியில் விட்ட பிறகு அந்த கோழி தனது குஞ்சியை பாதுகாத்து கொள்ளும்.
  • வெயில் நேரங்களில் அடை கோழியானது பாதியாக நின்ன நிலையில் அடை காத்து கொண்டிருக்கும்.வெயில் நேரத்தில் கோழிக்கு எந்த அளவிற்கு வெப்பம் கொடுக்க வேண்டும் என்று தெரியும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments