28.2 C
Jaffna
Monday, July 13, 2020
Home News Asia இலங்கை அரசுக்கு பொன்சேகா விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை அரசுக்கு பொன்சேகா விடுத்துள்ள எச்சரிக்கை!

சர்வதேச அமைப்புகளை அல்லது சர்வதேச நிறுவனங்களைச் சீண்டும் வகையில் ராஜபக்ச அரசு செயற்பட்டால் அவர்கள் மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும்,முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி கோட்டாபய உரையாற்றும் போது, ‘எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள படைவீரர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

எமது நாட்டுக்குஅநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச மட்டத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் இராஜதந்திர ரீதியில் செயற்பட வேண்டும்.அதை விடுத்து சர்வதேசத்துக்குச் சவால் விடும் வகையில் – மிரட்டல் விடும் வகையில் ஆட்சியிலுள்ளோர் செயற்படக்கூடாது. நல்லாட்சி அரசில் இதை நாம் சாதுரியமாகக் கைக்கொண்டோம்.

போர்க்குற்றங்களுக்காக மின்சாரக் கதிரையில் அமர்த்தப்பட இருந்த ராஜபக்சக்களை அதிலிருந்து நல்லாட்சி காப்பாற்றியிருந்தது.2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் ராஜபக்சக்களின் ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் கை விலங்குகளுடன் மின்சாரக்கதிரையில் அமர்ந்திருப்பார்கள்.

நல்லாட்சி அரசுக்குள் இறுதியில் நிலவிய பதவி மோகத்தால் அந்த ஆட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் கவிழ்ந்தது.

மீளவும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்சக்கள் மீண்டும் சர்வதேசத்துடன் முட்டி மோதுகின்றார்கள்.இதனால் அவர்களுக்கு மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

800 படத்துக்கான விளக்கமளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி,கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில்...

திருமண அறிவிப்பை வெளியிட்ட ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான்...

உண்மையை ஏற்றுக்கொண்ட கவுதம் கம்பிர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்...

சீன விஞ்ஞானி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக...

Recent Comments