29.1 C
Jaffna
Monday, July 6, 2020
Home Lifestyle Health பிரண்டையின் மருத்துவ பயன்கள்!

பிரண்டையின் மருத்துவ பயன்கள்!

பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி,சஞ்சீவி,உத்தன என்கிற பெயர்களும் உண்டு. 

  • பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்;ஞாபக சக்தி பெருகும்;மூளை நரம்புகளும் பலப்படும்.
  • இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரியாமை நீக்கும்.
  • பிரண்டை சாற்றில் புளி,உப்பு,கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி,அடிபட்ட வீக்கம்,எலும்பு முறிவு,வீக்கம் தீரும்.
  • பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய்சீராகும்.
  • பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும்.மேலும்,எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.
  • சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி, பலவீனம், தாது இழப்பு ஆகியவை தீரும்.
  • பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
  • கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி,சீதபேதி,நுரைத்த பச்சை பேதி தீரும்.
  • பிரண்டை உப்பினை 2A3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்,வாய்நாற்றம்,உதடு,நாக்கு வெடிப்பு தீரும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி,இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும்.
  • பிரண்டை நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது.ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம்.
  • ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு,இதய வால்வுகள் பாதிப்படையும்.இந்த பாதிப்புக்கு உள்ளானோர்,அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்;இதயம் பலப்படும்.

0 Reviews

Most Popular

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

பால் குலோப் ஜாமுன் செய்யும் எளியமுறை!

‘குலோப் ஜாமுன்’ என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.மென்மையாக, உருண்டையாக,பொன்னிறமாக பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் குலோப் ஜாமூன் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.சாதாரண குலோப் ஜாமூனே அலாதியான சுவை என்றால் வீட்டில்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

மேல்,வடமேல்,சபரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை...

Recent Comments