28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home News பிரபாகரனை புகழ்ந்த முன்னாள் இராணுவத் தளபதி!

பிரபாகரனை புகழ்ந்த முன்னாள் இராணுவத் தளபதி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரின் இறுதிப் போருக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதி என்று நாங்கள் அவரை அடையாளப்படுத்தியிருந்த போதிலும் தலைவன் என்ற ரீதியில் இறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய காரணத்தினால் பிரபாகரன் மீது மரியாதை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முற்பகல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளின் தலைவர் வே ...

நாடாளுமன்றிலிருந்து,இராணுவத் தலைமையகம் நோக்கிப் பயணித்த போது தொலைபேசி மூலம் பிரபாகரனின் சடலம் கிடைக்கப் பெற்றது என்ற செய்தி தமக்குக் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தொலைபேசி மூலம் தமக்கு பிரபாகரனின் மரணம் பற்றிய தகவலை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளையும் தங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் பிரபாகரன் உயிரிழந்த செய்தி கிடைக்கும் வரையில் ஆங்காங்கே சிற்சில சமர்கள் இடம்பெற்றதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மே மாதம் 17ம் திகதி ஆரம்பமான மோதல்கள் மே மாதம் 19ம் திகதி வரையில் நீடித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments