28.9 C
Jaffna
Monday, September 21, 2020
Home Lifestyle Beauty சிறந்த காலணிகளை தெரிவு செய்வது எப்படி!

சிறந்த காலணிகளை தெரிவு செய்வது எப்படி!

நமது உடலை தூக்கி சுமப்பது கால்கள்.அந்த கால்களை பாதுகாப்பவை,காலணிகள். சுகாதாரமற்ற இடங்களில் நடக்கும்போது,கால்களை நோய்க்கிருமிகள் தொடுகின்றன. சரியாக பாதங்களை பராமரிக்காவிட்டால்,அந்த நோய்க்கிருமிகளின் தாக்கு தலுக்கு உள்ளாகுகிறோம்.

அதனால்தான் வெளியே சென்றுவிட்டு திரும்பியதும்,கால்களை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்குள் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.ஆனால் இப்போது அந்த பழக்கம் இல்லை.ஒருசில இடங்களில் அதை பின்பற்றினாலும்,ஏதோ சடங்குபோல் கால்களில் தண்ணீர் ஊற்றி நனைத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவிடுகிறார்கள்.

ஆதி மனிதனும் காலணி அணிந்திருக்கிறான்.அவனுக்கு அப்போது எந்த மூலப்பொருள் கிடைத்ததோ,அதை வைத்து அவன் தனக்கு காலணிகளை உருவாக்கிக்கொண்டான். காலம் மாற மாற காலணிகளும் மாறி நவீனத்திற்கு வந்திருக்கின்றன.

அரசர்கள் காலத்தில் காலணிகள் தயாரிப்பில் பல வினோதங்கள் நிகழ்ந்துள்ளன. விதவிதமாக காலணி அணியும் ஆர்வ முடைய ராஜஸ்தான் மன்னர்கள் காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு கிராமத்தையே ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

பெண்களுக்கென்றும்,ஆண்களுக்கென்றும் தனித் தனி வடிவங்களில் பல்வேறு டிசைன்களில் இப்போது காலணிகள் கிடைக்கின்றன.ஆடைக்கு ஏற்ற வகைகளில் எல்லாம் காலணிகளை அணிந்து அழகுபார்க்க முடிகிறது.காலணிகளை பற்றிய ஆய்வு ஒன்று “பிரான்சு,அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிநவீன காலணிகள் பயன்படுத்தப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறது.

காலணிகளின் கவர்ச்சி வரலாறுமிருகங்களின் தோலில் செய்யப்படும் காலணிகள் நீடித்து உழைக்கக்கூடியது.ஆனால் ஒரு சிலருக்கு அவைகளால் ஒவ்வாமை ஏற்படும்.முரண்பாடான காலணியால் ஏற்படும் உபாதைகள் மூளை வரை சென்று ஒருவரின் மனநிலையை மாற்றும். உடலுக்கும் அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

அதை அவரது முகத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.அதனால் கால்களுக்கு பொருத்தமான காலணிகளை தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.ஒருவரது காலணி இன்னொருவருக்கு பொருந்தும் என்று சொல்ல முடியாது.

காலின் அமைப்பு என்பது உடலின் எடையை பொறுத்தது. எவ்வளவு அழகான காலணியாக இருந்தாலும் காலில் போட்டு கொஞ்சம் தூரம் நடந்து பார்த்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

கல்லூரிப் பெண்களை ஈர்க்கும் ...

இங்கிலாந்து பிரபுக்கள் தங்கள் ஆடைகள் மண்ணில் புரளாமல் பாதுகாக்கவும்,தங்களை உயர்குடி மக்கள் என்று காட்டிக்கொள்ளவும் விதவிதமாக பெரிய காலணிகளை அணிந்திருக்கிறார்கள்.

இந்தியாவில்,ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் பள்ளிகளில் காலணி அணியும் வழக்கம் கட்டாயமாக்கப்பட்டது.இது குழந்தைகளின் கால்களை பாதுகாக்கவும்,தொற்று நோய்கள் பரவாமலிருக்கவும்,உடலின் தட்பவெப்பத்தை சீராக வைக்கவும் பயன்பட்டது. குழந்தைகள் வளரும் பருவத்தில் கால்கள் அழகான வடிவத்தைப் பெறவும் அன்றைய காலணிகள் உதவின.

குள்ளமாக இருப்பவர்கள் சற்று தடிமனான காலணிகளை அணியலாம்.அகலமான கால்களுக்கு டிசைன் போட்ட காலணிகள் சிறந்தது.கால்களை பெரிதாகக் காட்ட பெரிய காலணிகளை வாங்கக்கூடாது.அது நடக்க சவுகரியமாக இருக்காது.அடர்ந்த நிறம் கொண்ட காலணிகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments