28.8 C
Jaffna
Monday, July 6, 2020
Home News யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் உதவி!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் உதவி!

ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா.சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் சிமார்ட் தொலைபேசி வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைத்தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, பேராசிரியர் சிவா.சிவானந்தன் சுமார் 22 இலட்சம் ரூபாவுக்கு தொலைபேசிகளைக் கொள்வனவு செய்து,யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் பணிப்பாளரும்,பௌதிகவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் பு.ரவிராஜன் மூலமாக தொலைபேசிகளை யாழ்.பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச ரீதியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கோவிட் 19 பரவலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் உலகளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி முறையினூடாகக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Best smartphones 2020: The top phones available to buy today

இணையவழிக் கற்றல் வசதிகள் பற்றி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில்,திறன் பேசி வசதிகள் இல்லாத மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு,அனுசரணையாளர்களின் மூலம் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து,பேராசிரியர் சிவா.சிவானந்தன் 100 தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்ததையடுத்து,பீடாதிபதிகளின் சிபார்சுக்கமைய வசதி குறைந்த மாணவர்களுக்கு இந்தத் தொலைபேசிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

0 Reviews

Most Popular

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

பால் குலோப் ஜாமுன் செய்யும் எளியமுறை!

‘குலோப் ஜாமுன்’ என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.மென்மையாக, உருண்டையாக,பொன்னிறமாக பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் குலோப் ஜாமூன் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.சாதாரண குலோப் ஜாமூனே அலாதியான சுவை என்றால் வீட்டில்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

மேல்,வடமேல்,சபரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை...

Recent Comments