28.2 C
Jaffna
Monday, July 13, 2020
Home News Asia இந்தியாவின் உதவியை நாடும் இலங்கை !

இந்தியாவின் உதவியை நாடும் இலங்கை !

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா பங்காளர் மற்றும் நண்பர் என்ற அடிப்படையில் அர்ப்பணிப்பை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும்,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது,கொரோனாவை கட்டுப்படுத்தவும்,ஸ்ரீலங்காவின் பொருளாதார பாதிப்பை சீர்செய்யவும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக மோடி உறுதி அளித்தார்.

இந்நிலையில்,கோட்டாபய ராஜபக்ச,கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சீர் செய்ய,இந்தியா ரூ.8 ஆயிரத்து 360 கோடி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

முன்னதாக சார்க் மாநாட்டின்போது,இந்தியாவிடம் கோட்டாபய ராஜபக்ச ரூ.3 ஆயிரத்து 40 கோடி கேட்டிருந்தார்.அதனுடன் சேர்த்து இந்த பணத்தையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேபோன்று,இந்திய நிதி உதவியுடன் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்துவது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமாணப் பணியை விரைவுபடுத்துமாறு இந்திய நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மோடியிடம் கோட்டாபய கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய ஒருநாளில் ஸ்ரீலங்காவிற்கு உதவத் தயார் என்று தூதுவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

இரண்டு நாடுகளின் தலைவர்களும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்களில் எப்போதும் ஒருவரொருக்கொருவர் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

India moves to seek closer military ties with Sri Lanka | India ...

இந்தநிலையில் இந்தியா இலத்திரனியல் வர்த்தக வசதிகளுடன் வர்த்தக அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் பொறிமுறை ஒன்றுக்கு தயாராகிவருகிறது என்றும் கோபால் பக்லே குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா நீண்டகால அடிப்படையில் போக்குவரத்து,வர்த்தக பொருளாதார விடயங்களில் நெருங்கி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

800 படத்துக்கான விளக்கமளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி,கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில்...

திருமண அறிவிப்பை வெளியிட்ட ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான்...

உண்மையை ஏற்றுக்கொண்ட கவுதம் கம்பிர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்...

சீன விஞ்ஞானி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக...

Recent Comments