28.2 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News நிலநடுக்கத்திலும் பணியை அசராமல் முடித்த பிரதமர்!

நிலநடுக்கத்திலும் பணியை அசராமல் முடித்த பிரதமர்!

நியூசிலாந்தில் நிலநடுக்கம் குறுக்கிட்டபோதிலும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அசராமல் தனது தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று பாராளுமன்றத்தில் இருந்தபடி, தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்று பேசினார்.அப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.அவருக்கு பின்னால் இருந்த திரை மற்றும் பொருட்கள் அதிர்ந்தன.எனினும் ஜெசிந்தா பதற்றப்படாமல் தொடர்ந்து தனது நேர்காணலை தொடர்ந்தார்.

தனக்கு பின்னால் இருக்கும் பொருட்கள் அசைவதைப் பார்த்தும் அச்சம் இன்றி, முகத்தில் புன்னகையுடன் பேசிய அவர்,‘இங்கு நாம் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்து இருக்கிறோம்’ என்றார்.சிறிது நேரத்தில் நில அதிர்வு நின்றது.தொடர்ந்து பேசிய ஜெசிந்தா,நேர்காணலை முழுமையாக முடித்தார்.

coronavirus in new zealand: நியூசிலாந்து ...

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் நேர்காணலில் கவனம் செலுத்திய அவரது திறனை மக்கள் பாராட்டுவதாக நியூசிலாந்து ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments