28.4 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News சீனாவின் அதிரடி அறிவிப்பு!

சீனாவின் அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என சீனா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது.இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.இதுவரை விசாரணை குறித்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வந்த சீனா,இப்போது இறங்கி வந்துள்ளது.இது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி,பீஜிங்கில் நேற்று அளித்த வருடாந்திர பேட்டியின்போது வெளிப்பட்டது.

அவர் நிருபர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசின் தோற்றம் பற்றி ஆய்வு செய்வதற்கு (விசாரணைக்கு) சர்வதேச அறிவியல் சமூகத்துடன் விஞ்ஞான ரீதியில் ஒத்துழைப்பு தர சீனத்தரப்பு ஒரு திறந்த நிலைப்பாட்டை கொண்டு இருக்கிறது.இந்த ஆய்வு செயல்முறையானது, தொழில்முறையில் அமைய வேண்டும்.நியாயமானதாகவும்,ஆக்கபூர்வமானதாகவும் இருக்கக்கூடாது.நியாயமாக நாம் ஆய்வில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் அரசியலை தவிர்க்க வேண்டும்.

இந்த ஆய்வின்போது,அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் ஆய்வுக்கு முன்பாகவே குற்றச்சாட்டு சுமத்துவதை சீனா எதிர்க்கிறது.

கொரோனா வைரஸ் சீற்றத்துக்கு மேலாக அமெரிக்காவில் ஒரு அரசியல் வைரசும் பரவுகிறது.அது சீனாவை தாக்கி இழிவுபடுத்துவதாகும்.சில அமெரிக்க அரசியல்வாதிகள் அடிப்படை உண்மைகளை கவனிக்காமல்,பல பொய்களை இட்டுக்கட்டி வருகிறார்கள்.அத்துடன் பல சதித்திட்டங்களையும் தீட்டி உள்ளனர்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக ஆதாரம் இன்றி வழக்கு தொடுக்கிறார்கள்.இது சர்வதேச சட்ட விதிகளை மிதித்து, மனசாட்சியை கைவிடுவதாக அமைந்துள்ளது.இது பொய்யானது.இதை நியாயப்படுத்த முடியாது.இது சட்டவிரோதமானது.இத்தகைய வழக்குகளை கொண்டு வருகிறவர்கள் பகல் கனவு காணுகிறார்கள்.அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக்கொள்வார்கள்.

Former China parliament advisory head expelled from party

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான விஷயம்,பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையும்,ஆரோக்கியமும் இப்போது போல ஒருபோதும் நெருக்கமாக இணைக்கப்படவில்லை என்பதுதான்.

அனைத்து நாடுகளும் ஒரே உலகளாவிய கிராமத்தில் வாழ்கின்றன என்பதையும், மனித நேயம் என்பது பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட ஒரு சமூகம் என்பதையும், இதுவரை எதுவும் தெளிவுபடுத்தியது இல்லை.

கொரோனா வைரசைப் பொறுத்தமட்டில் அதற்கு எல்லைகள் இல்லை.இனங்கள் கிடையாது.எந்த பாரபட்சமும் இன்றி ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது.

அரசியல் ரீதியில் இதை கையாண்டால்,அது வைரசுக்கு ஓட்டைகளை சுரண்டுவதற்கான வழியை கொடுக்கும்.நாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள்.அறிவியலை நிராகரித்தால்,இந்த வைரஸ்,பெரிய அழிவை ஏற்படுத்த அனுமதிப்பதாகும்.

விலை மதிக்க முடியாத பல உயிர்களை கொரோனா வைரஸ் கொன்றுள்ளது.இதனால் நாடுகள் புவியியல்,இனம்,வரலாறு,கலாசாரம்,சமூக அமைப்பு உள்ளிட்டவற்றை தாண்டி நாடுகள் எழுந்து நிற்க வேண்டும்.

உலகெங்கும் உள்ள நாடுகள் பகிரப்பட்ட எதிர்காலத்துக்காக,ஒன்றிணைந்து செயல்பட்டு,இந்த பூமியை கூட்டாக பாதுகாக்க வேண்டும்.பூமி மட்டும்தான் நம் அனைவருக்குமான வீடு ஆகும்.

சீனாவும், அமெரிக்காவும் அமைதியான சக வாழ்வு வாழவும்,பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான வழியைக் கண்டுபிடித்து வெவ்வேறு அமைப்புகள் மற்றும் கலாசாரங்களை கொண்ட நாடுகளுக்கு இது சாத்தியம் என்பதை நிரூபிக்க வேண்டும்.

சீனா மிகப்பெரிய வளரும் நாடாக உள்ளது. அமெரிக்கா,வளர்ந்த நாடு என்ற வகையில் அது உலக அமைதிக்கும்,வளர்ச்சிக்கும்,சிறப்பான பொறுப்பை கொண்டுள்ளது.

அமெரிக்காவை மாற்றவோ,அந்த இடத்துக்கு இன்னொரு நாட்டை கொண்டு வரவோ சீனா நினைக்கவில்லை.ஆனால் சீனாவை மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதற்கான நேரம் வந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனம் பற்றி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், “ஒவ்வொரு தொற்றுநோயையும் அடுத்து உலக சுகாதார நிறுவனம், மறு ஆய்வு மற்றும் மதிப்பீட்டை செய்யும்.இதுபோன்ற மதிப்பாய்வு, பன்முகத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தி விடக்கூடாது. அது,உலக சுகாதார நிறுவனத்தை குறைகூறுவதை விட அதற்கு ஆதரவு அளிப்பதாகவும் அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments