28.3 C
Jaffna
Monday, September 28, 2020
Home News Asia ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் ஜனாதிபதியின் வேண்டுகோள்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் ஜனாதிபதியின் வேண்டுகோள்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்களில்,

தற்போதைய கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீண்டகாலமாக அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை முதன்முறையாக (26)(இன்று) முதல் தளர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு நான் உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

Sri Lanka president warns UN over war crimes claims

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,தீவின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் 66 நாட்களுக்குப் பின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments