29 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia ஆரம்பமாகியது!மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள்

ஆரம்பமாகியது!மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள்

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஐந்து வீதிகளின் ஊடாக கொழும்புக்கு வரும் பேருந்துகள் கொழும்புக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி,

கண்டி வீதியினூடாக வரும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் நிட்டம்புவ வரை மாத்திரமே பயணிக்க முடியும்.

மார்க்க இலக்க 5 இன் ஊடாக பயணிக்கும் மாகாணங்களுக்கிடையிலாக பேருந்துகள் மினுவாங்கொடை வரை மாத்திரமே பயணிக்க முடியும்.காலி வீதியினூடாக வருகைதரும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் பாணந்துறை வரை மாத்திரமே சேவையில் ஈடுபடும்.

அவ்வாறே அவிசாவளையினூடாக கொழும்புக்கு பயணிக்கும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்படும்.

அதேபோல அநுராதபுரம் புத்தளம் மற்றும் குளியாப்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் நீர்கொழும்பில் நிறுத்தப்பட வேண்டும்.அவ்வாறே தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக வரும் பேருந்துகள் கொட்டாவ வரை மாத்திரமே பயணிக்க முடியும்.

இந்த பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணமானது குறித்த பேருந்து நிறுத்தப்படும் இடம் வரை மாத்திரமே அறவிடப்பட வேண்டும்.

இந்த பேருந்துகளின் முன்பக்கத்தில்,குறித்த பேருந்து நிறுத்தப்படும் இறுதி இடம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறே சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய, அனைத்து பயணிகளும் கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் உரிய பொது சுகாதார விதிகளை பின்பற்றுமாறு போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

அதன்பின்னர்,கொழும்பு,கம்பஹா மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து,ரயில் சேவைகள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments