28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News கொரோனா தொற்றுக்குள்ளாகாத ஒரு குட்டி நாடு!பின்னணியில் ஒரு அழகி

கொரோனா தொற்றுக்குள்ளாகாத ஒரு குட்டி நாடு!பின்னணியில் ஒரு அழகி

உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் வரை கொரோனாவால் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில்,கொரோனாவே இல்லாத நாடாக உள்ளது, குட்டி நாடான Samoa!

அதன் பின்னணியில்,இலங்கைக்கு பாலம் அமைக்க கொஞ்சம் உதவிய அணில் போல ஒரு அழகிய இளம்பெண் இருக்கிறார்.

அவர் பெயர் Fono என்னும் Fonoifafo McFarland-Seumanu.உண்மையாகவே அவர் அழகிதான்!

மிஸ்.Samoaபோட்டியில் வென்றதால் மட்டுமல்ல,தன் நாட்டில் எந்தப்பக்கம் திரும்பினாலும் சாவு வாடை வீசிக்கொண்டிருந்தபோது,தன் அழகிப் பட்டத்தை கழற்றி கீழே வைத்துவிட்டு ஒரு செவிலியராக களத்தில் இறங்கி பணி செய்ததால்…

பொதுவாக அழகிப்பட்டம் பெற்றதும் இளம்பெண்கள் தங்கள் நாடு முழுவதும் சுற்றி வருவார்கள்,அழகு சாதனங்களுக்கு மொடலாக போஸ் கொடுப்பார்கள்,ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் Fono அழகிப்பட்டம் பெற்று நாடு திரும்பும் நேரத்தில்,அவரது நாட்டின் மொத்த மக்கள் தொகையான 200,000 பேரில் 6,000 பேருக்கு மணல்வாரி அல்லது மண்ணன் என்று அழைக்கப்படும் அம்மை நோயான measles தொற்றியிருந்தது.

83 பேர் உயிரிழந்திருந்தார்கள்,அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்!

Samoa நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது,ஒரு மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக.

பொது சுகாதார செவிலியரான Fono,ஒரு தன்னார்வலராக நாட்டு மக்களுக்கு சேவை செய்ய களமிறங்கினார்.

வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட மருத்துவ குழுக்களுடன் தானும் இணைந்துகொண்டார் Fono.

அவர் சந்தித்த ஒவ்வொரு குடும்பமும், தங்கள் வீட்டு வாசலில் மிஸ்.Samoa நிற்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்கள்.

தான் அப்போது தன்னை மிஸ்.Samoaவாக எண்ணவில்லை,தடுப்பூசி போடும் குழுவில் ஒருவராகத்தான் தன்னை எண்ணிக்கொண்டேன் என்கிறார் Fono.

துரதிர்ஷ்டவசமாக அவர் சந்தித்த சில குடும்பங்கள் அப்போதுதான் தங்கள் குழந்தை ஒன்றை சாகக்கொடுத்திருந்தன.

குழந்தைகளைப் பறிகொடுத்த சிலர்,இதைத்தான் அந்த மிஸ்.Samoa பெண் சொல்லிக்கொண்டிருந்தார்,அப்போது நம்மில் பலர் அதற்கு செவிகொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டார்கள்.

வேறு வகையில் சொல்லப்போனால்,இக்கட்டான நிலையிலிருந்த தன் நாட்டு மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார் Fono.

மணல் வாரி அம்மையில் பட்ட அடியில் விழித்துக்கொண்ட Samoa நாடு,உலகில் கொரோனா பரவுவதை கண்டதும் உஷாராகிவிட்டது.

பிப்ரவரி மாதமே சீனா அல்லது ஹொங்ஹொங்கிலிருந்து வருவோர்,அவர்கள் ஏற்கனவே இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலன்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

சிலர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது…பின்னர்,சர்வதேச பயணம் வரை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

இன்று கொரோனா இல்லாத நாடாக Samoa திகழும் நிலையில்,Fono கொரோனா குறித்த விழிப்புணர்வையும்,தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு ஏற்படுத்திவருகிறார். உண்மையாகவே பாராட்டப்படவேண்டிய அழகிதான்,மிஸ். Samoa, Fono!

 

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments