28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home News பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இயங்கவுள்ள திகதி அறிவிப்பு!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இயங்கவுள்ள திகதி அறிவிப்பு!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக கொவிட் 19 ஒழிப்பு செயலணி குழு ஜனாதிபதிக்கு அந்த அறிக்கையை முன்வைத்துள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை மீளக்கட்டியமைத்தலுக்கான நடவடிக்கை மற்றும் மற்றும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கொவிட் 19 ஒழிப்பு செயலணி நேற்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒன்று கூடிய போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் ஊரடங்கு! விமான ...

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் சமூகப்பரவலிலிருந்து அடையாளம் காணப்படவில்லை எனவும் அந்த செயலணி ஜனாதிபதியிடம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments