28.4 C
Jaffna
Monday, July 13, 2020
Home Sports Indoor இந்திய வீரர்கள் மீது குற்றம்சாட்டும் பாகிஸ்தான் வீரர்!

இந்திய வீரர்கள் மீது குற்றம்சாட்டும் பாகிஸ்தான் வீரர்!

யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் எனக்கு எதிராக பேச கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களாக ஹர்பஜன் சிங்,யுவராஜ் சிங் உள்ளிட்டோர் சாகிப் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில்,அப்ரிடி காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் மோடி தொடர்பாகவும் பொது இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இந்திய வீரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.அதில் ஹர்பஜன் சிங்,”இந்தியா குறித்தும்,நம் பிரதமர் குறித்தும் ஷாகித் அப்ரிடி பேசியது வருத்தம் அளிக்கிறது. அதோடு அதை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்ரிடி தனது அறக்கட்டளைக்காக உதவும் படி கேட்டுக்கொண்டார்.மனிதாபிமான அடிப்படையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தவிப்பவர்களுக்காக தான் நாங்கள் உதவினோம்.

Shahid Afridi picked as 'best T20I all-rounder of last decade' by ...

ஆனால் அந்த மனிதர் தற்போது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இனி அவருடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. நம் நாட்டைப்பற்றி அவதூராக பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை” என காட்டமாக தெரிவித்திருந்தார்.

மேலும் யுவராஜ் சிங்,கவுதம் காம்பீர்,ஷிகர் தவான்,சுரேஷ் ரெய்னாவும் அப்ரிடியின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இது குறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அப்ரிடி அளித்த பேட்டியில்,“நான் எப்போதும் ஹர்பஜன் மற்றும் யுவராஜூக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். அவர்கள் அந்த நாட்டில் இருக்கிறார்கள்.எனக்கு எதிராக பேச கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்,அவ்வளவுதான் இனிமேலும் இது குறித்து பேச விரும்பவில்லை”என தெரிவித்திருக்கிறார்.

0 Reviews

Most Popular

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி!

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங்...

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. பிரித்தானியா வெளியிட்டுள்ள பட்டியல் ஒன்றில்,70க்கும் மேற்பட்ட நாடுகள்,இனி பிரித்தானியாவுக்கு வந்தால் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி,ஆஸ்திரியா,இத்தாலி...

பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில்,அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேரள...

திருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு!

கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Recent Comments