28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home Technology Computing விண்டோஸ் 7 இயங்குதளத்தினை பாவிப்பது ஆபத்தானதா?

விண்டோஸ் 7 இயங்குதளத்தினை பாவிப்பது ஆபத்தானதா?

விண்டோஸ் 7 இயங்குதளத்தினை மைக்ரோசொப்ட் நிறுவனமானது 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அறிமுகம் செய்திருந்தது.

மிகப்பெரிய பயனர் இடைமுக மாற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட இவ் இயங்குதளமானது பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்ததுடன் 10 வருடங்களை தாண்டி இன்றும் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் விண்டோஸ் 8,விண்டோஸ் 10 எனும் இயங்குதளப் பதிப்புக்கள் பின்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் (Security Support) மைக்ரோசொப்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இதன் பின்னர் குறித்த இயங்குதளத்தினை பயன்படுத்துவது ஆபத்தானது எனவும் இலகுவாக ஹேக் செய்து தகவல்களை திருட முடியும் எனவும் பலரால் நம்பப்படுகின்றது.

பெருநிறுவனங்கள்,வங்கிகள் போன்றவற்றில் இப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவற்றில் உள்ள கணினிகளில் இயங்குதளங்கள் மாற்றப்பட்டுவருகின்றன.

எனினும் தனிநபர் பாவனைக்கு சில வழிமுறைகளைப் பின்பற்றி பயன்படுத்த முடியும்.

  • இதன்படி விளம்பரங்களை தடைசெய்தல்

இணையத்தளங்களைப் பயன்படுத்தும்போது அவற்றில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதுண்டு.எனவே,அவற்றின் கவர்ச்சியால் கிளிக் செய்வதன் மூலம் சைபர் தாக்குதல்களுக்கு வழிசமைத்து கொடுப்பதாக அமைந்துவிடும்.

இதனைத் தவிர்ப்பதற்கு Ad Blocker நீட்சிகளைப் பயன்படுத்தி விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.

  •  கண்டிப்பாக பிரத்தியேக ஆன்டிவைரஸ் மென்பொருள் ஒன்று நிறுவ வேண்டும்.

இதன் ஊடாக சைபர் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.

  • இணைய உலாவியினை அப்டேட் செய்தல்.

மைக்ரோசொப்ட் நிறுவனமானது 2021 ஆம் ஆண்ட ஜுலை மாதம் வரை குரோம் இணைய உலாவியானது விண்டோஸ் 7 இயங்குளத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும் என உறுதியளித்துள்ளது.

அதேபோன்று ஏனைய இணைய உலாவிகளையும் அப்டேட் செய்வதன் ஊடாக இணையவழி சைபர் தாக்குதல்களை தவிர்க்க முடியும்.

  • மென்பொருட்களின் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புக்களை பயன்படுத்துதல்

இயங்குதளம் விண்டோஸ் 7 ஆக இருந்த போதிலும் MicroSoft நிறுவனத்தின் புதிய மென்பொருட்கள் அவற்றில் செயற்படக்கூடியதாகவே இருக்கும்.

எனவே புதிய மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் ஊடாக குறைந்தது மென்பொருட்களுக்கான பாதுகாப்பு உதவிகளையாவது மைக்ரொசொப்ட் நிறுவனத்திடமிருந்த பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறான முன்னேற்பாடுகளுடன் விண்டோஸ் 7 இயங்குதளத்தினை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

அவ்வாறில்லாவிடின் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 10 இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்துவதே சிறந்தது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments