27.5 C
Jaffna
Saturday, September 26, 2020
Home News இராணுவத்தினரின் உதவியை நாடும் பிரதமர்!

இராணுவத்தினரின் உதவியை நாடும் பிரதமர்!

முதியோர் இல்லங்களில் தங்கப்பட்டிருக்கும் முதியவர்கள் தொடர்பில் தனக்கு கிடைத்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கொரோனாவைத் தொடர்ந்து முதியோர் இல்லங்களில் மரணங்கள் அதிகரித்ததையடுத்து,ஒன்ராறியோவும்,கியூபெக்கும் உதவி கோரியதைத் தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராணுவத்தை அனுப்பினார்.

இந்நிலையில் இராணுவம் அளித்த அறிக்கை தன்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கனடா பிரதமர் ஜஸ்டின் மீது பாலியல் ...

ஒன்ராறியோ அரசு அளித்துள்ள அந்த அறிக்கை,அந்த முதியோர் இல்லங்களில் தங்கியிருப்போர் பல நாட்களாக குளிக்கவைக்கப்படவில்லை என்றும்,முதியோர் மலத்துடனேயே பல மணி நேரம் சுத்தம் செய்யப்படாமலேயே விடப்பட்டிருப்பதாகவும், கொரோனா நோயாளிகள் சர்வ சாதாரணமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

ரொரன்றோ முதியோர் இல்லத்தில் பணி புரிவோர்,ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாகவும்,வலியால் தவிக்கும் முதியோரை இரண்டு மணி நேரம் வரை கூட கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எறும்புகளும் கரப்பான் பூச்சிகளும் சர்வசாதாரணமாக நடமாடும் அந்த இல்லங்களில், சுத்தத்துக்கும் சுத்தம் செய்தலுக்கும் பெரிய இடைவெளி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு போதுமான பயிற்சி இல்லையென்றும், அவர்கள் நோயாளிகளை முரட்டுத்தனமாக படுக்கையிலிருந்து இழுத்து மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையைப் படித்த தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக வேதனை தெரிவித்துள்ள கனடா பிரதமர் ட்ரூடோ,முதியோர் இல்லங்களில் காணப்படும் நிலைமையை மாற்ற அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

ஒன்ராறியோ பிரீமியரான Doug Fordம்,இத்தகைய கொடுமைகளை செய்தவர்கள் கணக்கு கொடுக்கவேண்டும் என்றும்,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதோடு அந்த அறிக்கை பொலிசாருக்கு அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments