27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News யுத்தத்துக்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு!

யுத்தத்துக்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு!

தற்போதுள்ள சூழ்நிலையில்,இராணுவ வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும்,போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையிலேயே சீன அதிபரும் தற்போது இவ்வாறு உத்தரவிட்டிருக்கிறார்.

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.

முன்னதாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கொரோனாவைப் பரப்பியது சீனாதான் என்று அமெரிக்காவும்,அமெரிக்காதான் என்று சீனாவும் மாறி மாறிக் குற்றம்சாட்டி வருகிறது.

இந் நிலையில் அமெரிக்கா சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பலநாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Mansarovar yatra via Nepal hit as China shuts Tibet border - The ...

இதனையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான போர் முழக்கமாகவும் சீன அதிபரின் இந்த உத்தரவு அமையலாம் என அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் அதிபர் ஷி ஜின்பிங் இராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவுப் பிறப்பித்ததாக சீன அரசு செய்தி நிறுவனமான சினுவா தகவல் வெளியிட்டுள்ளது.

சீன இராணுவம் பயிற்சியைக் கூட்ட வேண்டும்,எந்த ஒரு மோசமான சூழலுக்கும் இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments