28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News சம்மந்தம் இல்லாத பிரச்சனையில் தலைப்போடும் அமெரிக்கா!

சம்மந்தம் இல்லாத பிரச்சனையில் தலைப்போடும் அமெரிக்கா!

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தை குறைத்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே லடாக் எல்லை பிரச்சனை கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இரு நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளில் ராணுவத்தை குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில்,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,“இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அது என்னவென்றால்,எல்லை பிரச்சினை தொடர்பாக அந்த இரு நாடுகள் நடுவே எழுந்துள்ள கொந்தளிப்பு நிலையை சரி செய்வதற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறது.நன்றி!” இவ்வாறு டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசை,சீன வைரஸ் என அழைத்து சீனாவை சீண்டி வருகிறார் ட்ரம்ப். சீனா ஹாங்காங்கில் காட்டும் கெடுபிடிக்கு எதிராக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை விரைவில் எடுக்க உள்ளது எனவும் அறிவித்தார்.

ஆனால்,இப்போது இந்தியா-சீனா விவகாரத்தில் வெள்ளைக்கொடி கொண்டுவர ரெடியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments