28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Sports Outdoor 10 ஆண்டுக்கான தலை சிறந்த வீரர் இவர் தான்!

10 ஆண்டுக்கான தலை சிறந்த வீரர் இவர் தான்!

தன்னுடைய கனவு அணிக்கு எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ள இயான் பிஷப்,கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கேப்டன் எனவும் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் கடந்த 10 ஆண்டில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு அணியை உருவாக்கியுள்ளார்.அந்த ஒருநாள் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
இணையதளத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடனான உரையாடலில்,தன்னுடைய தலைசிறந்த ஒருநாள் அணியின் விவரங்களை பகிர்ந்துகொண்டார்.அதில் பிஷப் லெவனின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும்,ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் இடம்பெறுகின்றனர்.
இவர்கள் இருவரும் 2019 உலகக்கோப்பையில் அதிக ரன்களை குவித்தவர்கள். இதற்கடுத்து 3-ம் நிலை வீரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் பிஷப். அதற்குக்காரணம் கோலியின் சீரான வேகத்தில் ரன் குவிக்கும் திறனே எனத் தெரிவித்துள்ளார்.

The mystery that surrounds Mahendra Singh Dhoni

அதற்கடுத்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ்,நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் அதிரடிக்கும் அதே சமயம் நிலையான ஆட்டத்துக்கும் சொந்தக்காரர்கள் என விளக்கமளித்துள்ளார்.
இதற்கடுத்தபடியாக ஆல் ரவுண்டர்களில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார். பின்பு விக்கெட் கீப்பராக எம்எஸ் டோனியை தேர்வு செய்துள்ள பிஷப் அவரை கேப்டனாகவும் அறிவித்துள்ளார்.மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் இருந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் டோனி இருந்துள்ளார்: இயான் பிஷப்
பிஷப் கனவு அணியின் பவுலர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், லசித் மலிங்கா,டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.பிஷப் அணியின் ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத்கான் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments