28.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க பணிகள் தீவிரம்!

120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க பணிகள் தீவிரம்!

தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தெலுங்கானாவில் உள்ள பப்பன்னாபேட் மண்டல் என்ற பகுதியில் 3 வயது சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சாய் வர்தன் தனது வீட்டின் பின் பக்கத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

சாய் வர்தனின் அப்பா கோவர்தன் விவசாயி.இவரின் மொத்த குடும்பமும் விவசாய குடும்பம் ஆகும்.இவர் தனது வீட்டின் பின் பக்கத்தில் விவசாய தேவைக்காக ஆழ்துளை கிணறுகளை மூன்ற தோண்டி இருக்கிறார்.

அந்த இடத்தில்தான் சாய் வர்தன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.

குறித்த ஆழ்துளை கிணறுகள் மூன்றிலும் தண்ணீர் கிடைக்கவில்லை.இதனால் அந்த ஆழ்துளை கிணறுகளை மூடும் பணியில் சாய் வர்தனின் அப்பா கோவர்தன் ஈடுபட்டு உள்ளார்.

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 ...

ஒவ்வொரு கிணறுகளாக மூடப்பட்டு வந்தது. அப்போது சாய் வர்தன் அங்கு விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.அங்கு விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்துள்ளார்.இரண்டாவது கிணற்றில் தவறி அந்த சிறுவன் விழுந்து இருக்கிறான்.

அந்த கிணறு 120 அடி ஆழம் கொண்டது.இன்று மாலை 4.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.இதையடுத்து உடனடியாக மீட்பு படையினருக்கு தந்தை தகவல் கொடுத்துள்ளார்.அங்கு தீயணைப்பு படையினர் உடனடியாக வந்துள்ளனர்.தற்போது அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments