28.9 C
Jaffna
Monday, September 21, 2020
Home Lifestyle Disease எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டாது,ஆண்ககளை தாக்கும் நோய்கள்!

எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டாது,ஆண்ககளை தாக்கும் நோய்கள்!

பின்வரும் நோய்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஆண்களுக்கு வெளிக்காட்டாது.ஆனால் திடீரென்று இந்தமாதிரியான நோய்கள் ஆண்களை தாக்கிவிடும்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால்,பேராபத்தாககூட மாற வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தான சைலண்ட் கில்லர் நோய்களைப் பற்றி பார்ப்போம்.

கொலஸ்ட்ரால்

ஆண்களுக்கு உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்.இதனால் இதய நோய்கள்,ஹார்ட் அட்டாக் ஏற்படுவதன் முதல்வே முக்கிய காரணம்.

மூளைக்கு செல்லும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனைத் தடுப்பதன் மூலம் இது பக்க வாதத்தையும் ஏற்படுத்திவிடும்.இந்நோய் திடீரென்று ஆண்களை தாக்கக்கூடியது. முறையான உடற்பயிற்சி செய்தால் கொலஸ்ட்ரால் குறையும்.

தினமும் அரைமணிநேரம் நடப்பது மற்றும் படிக்கட்டில் ஏறுவது உடலுக்கு நல்லது.முட்டை,நட்ஸ்,கொழுப்பு குறைவான பால்,ஃபைபர் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்.ஆல்கஹால் டிரிங்க்கையும் குறைத்து கொள்ளுங்கள்.

“புகைப்பழக்கமும்,குடிப்பழக்கமும் கொலஸ்ட்ரால் அளவை ஆபத்தான அளவுக்கு உயர்த்தி விடும்.அதனால் உடலை பேணிப் பாதுகாப்பது நன்மையை பயக்கும்.

விதைப்பை புற்றுநோய்

விதைப்பை புற்றுநோய் இதை புரோஸ்டேட் கேன்சர் என்று கூறப்படுகிறது. இந்நோய் ஆண்களை அதிக அளவில் பாதிக்கும் நோயாகும்.15% ஆண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்நோய் அதிகமாக தோன்றுகிறது.

முன்னொரு காலத்தில் இந்நோய் அதிகபட்சமாக 50 வயதிற்கு மேல்தான் ஏற்பட்டது. ஆனால் இந்தக்காலக்கட்டங்களில் இந்நோய் 35 வயது கொண்ட ஆண்களை தாக்கியுள்ளதாக ரிசர்ஜ் சொல்கிறது.

உணவை கட்டுப்பாட்டாக சாப்பிட்டால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.பால் நன்றாக குடிக்கலாம்.அல்லது மற்றும் சோயா போன்ற பொருட்களை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிவப்பு இறைச்சி,ஆல்கஹால் போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது அவசியம். அதிக உடலுழைப்பு இல்லாதவர்கள் இடையே இந்த கேன்சர் ஏற்படுவதற்கான மருத்துவர்கள் கூறுகின்றனர்.

35 வயதுக்குப் பின்னர் புரோஸ்டேட் ஆண்டிஜென் ரத்த பரிசோதனை மற்றும் டிஜிட்டல் ரெக்டல் பரிசோதனை ஒவ்வொரு ஆணும் செய்து கொள்வது அவசியம்.சரியான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தாலே இந்நோயிலிருந்து விடுபடலாம்.

சிறுநீரக நோய்

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,சிறுநீரக நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.இந்த ஆபத்து 60 வயதுக்கு மேல் இருப்பவர்களை அதிகளவில் பாதிக்கிறது.இதனால் சிறுநீரக செயல்பாடும் இழக்கப்பட்டு,ரத்தத்தில் நீரும்,கழிவும் அதிகமாக சேர்ந்து வெளிவரும்.

நிறைய பழங்கள்,காய்கறிகள்,தானியங்கள் மற்றும் கொட்டைகளை சாப்பிட்டால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.அதிக கொழுப்பில்லாத இறைச்சி,மீன் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

சர்க்கரை மற்றும் உப்பு உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.முறையாக உடற்பயிற்சி செய்தால் நோய்யிலிருந்து ஆண்கள் தற்காத்துக் கொள்ளலாம்.

35 வயதுக்குப் பின்னர் சிறுநீரக செயல்பாட்டை ஆண்கள் பரிசோதனை செய்வது அவசியம்.சோர்வு,பசியின்மை,குமட்டல்,வாந்தி அல்லது கை விரல்கள்,கால்விரளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களிடம் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments