28.4 C
Jaffna
Monday, July 13, 2020
Home Cinema ஆனந்தத்தின் உச்சத்தில் நாகார்ஜூனா மருமகள்!

ஆனந்தத்தின் உச்சத்தில் நாகார்ஜூனா மருமகள்!

சென்னையைச் சேர்ந்த சமந்தா,2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார்.அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும்,அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது.

தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதையடுத்து அஜித்,சூர்யா,தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

ஒரு கோடியை எட்டியதால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் சமந்தா
                   சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.இந்நிலையில், நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த தகவல்களை தாம் துள்ளிக்குதிக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள நடிகை சமந்தா,ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் இதையொட்டி அவர் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

0 Reviews

Most Popular

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி!

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங்...

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. பிரித்தானியா வெளியிட்டுள்ள பட்டியல் ஒன்றில்,70க்கும் மேற்பட்ட நாடுகள்,இனி பிரித்தானியாவுக்கு வந்தால் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி,ஆஸ்திரியா,இத்தாலி...

பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில்,அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேரள...

திருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு!

கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Recent Comments