28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News சோகமான சாதனை படைத்துள்ளோம்!

சோகமான சாதனை படைத்துள்ளோம்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் முதலிடம் பிடித்துள்ள அமெரிக்காவில் ஒரு இலட்சம் பேர் உயிரிழந்திருப்பது சோகமான சாதனை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனாவால் ஒரு லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பாராக’’ எனப் பதிவிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments