28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home Sports Indoor அவுஸ்திரேலிய கிரிக்கெட்டி தலைமை நிர்வாக அதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை!

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டி தலைமை நிர்வாக அதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை!

2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் டி-20 உலகக் கோப்பை நடக்குமா என்பது குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட படி அக்டோபர்-நவம்பரில் டி-20 உலகக் கோப்பை நடப்பது கொரோனா வைரஸ் தொற்றுநோயால் “மிக அதிக ஆபத்தில்” இருப்பதாகக் கூறினார்.

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் அது நிகழும் வாய்ப்பு குறித்து மிக அதிக ஆபத்து இருப்பதை சொல்லியாக வேண்டும் என்று ராபர்ட்ஸ் கூறினார்.

2020 உலகக் கோப்பை நடக்காத பட்சத்தில், அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் காலகட்டத்தில், அடுத்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்த சாத்தியமான வாய்ப்புகள் உள்ளன என ராபர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

2020 உலகக் கோப்பை ஒத்திவைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. எனினும்,ஐசிசி தரப்பில் இது உறுதிசெய்யப்படவில்லை.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments