28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home Lifestyle Health புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் மூன்று பழங்கள்!ஆய்வில் தகவல்

புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் மூன்று பழங்கள்!ஆய்வில் தகவல்

புகைப்பழக்கத்தை நிறுத்தவே முடியாதா என்று நிறைய பேர் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.ஒரு பிரச்சினை இருந்தால் அதற்கு தீர்வும் கட்டாயம் இருக்கத்தானே செய்யும்.ஆனால் மருந்துகள் எல்லாம் இந்த பழக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது.

நீங்கள் சாப்பிடுகின்ற சில உணவுகள் சொல்வதன் மூலம் உங்களுடைய புகைப்பழக்கத்தை வேகமாக மாற்றிவிடலாம்.அது பற்றிய ஆய்வுகள்,உண்மையை பற்றி இங்கே காண்போம்.

ஐரோப்பியாவில் உள்ள மருத்துவ ஆய்வு இதழுக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்,680 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.அதில் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்லாது, புகைப்பழக்கம் இல்லாதவர்கள், புகைப்பழக்கத்தை பாதியில் நிறுத்தியவர்கள் என பல வகையான மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அவர்களுடைய நுரையீரலின் செயல்பாடுகள் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்கப்பட்டது.அதில் புகைப்பழக்கத்தை மருந்தின் மூலம் நிறுத்திய பின்,10 ஆண்டுகள் கழித்து மீண்டும் நுரையீரல் செயல்பாடுகள் சீராக இல்லாதது கண்டறியப்பட்டது.

ஆய்வின் முடிவில் மருத்துவர்கள் பரிந்துரைத்தது என்னவென்றால்,எந்த மருந்துகளும் தேவையில்லை.மூன்று பழங்களை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.எந்த மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத புகைப்பழக்கத்தை இந்த மூன்று பழங்களும் நிரந்தரமாக மாற்றும் என்று கூறப்படுகிறது.அவை என்னென்ன என்று பார்ப்போம்.

சில உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும்.இதில் மிக முக்கியமான ஒன்று தான் தக்காளி.தக்காளியில் லைகோபைன் அதிகமாக இருக்கிறது.இது நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வாழைப்பழத்திலும் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இதுவும் நுரையீரலைப் பாதுகாக்கும். ஆப்பிளும் நுரையீரலுக்கு மிக நல்லது.

ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரல் சுவாசப் பிரச்சினைகளை நீக்கும். மூச்சுத் திணறலையும் சரிசெய்யும்.இது போன்ற ஆன்டி- இன்பிளமேட்ரி திறன் கொண்ட காய்கறிகளும் பழங்களும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும்.

தக்காளி,வாழைப்பழம்,ஆப்பிள் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்ட பின்,கொஞ்சம் கொஞ்சமாக புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறது அந்த ஆய்வு.

இந்த மூன்று பழங்களிலும் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் நுரையீரலில் தேங்கியிருக்கின்ற நச்சுகளை வெளியேற்ற ஆரம்பிக்கும். நுரையீரலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி,புதிய செல்களை உருவாக்குகிறது.

நம் முன் உள்ள தட்டில் என்ன வகையான உணவு வைத்திருக்கிறோம்.என்ன சாப்பிடுகிறோம் என்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments