28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home News கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தெரிவு செய்வப்படட நாடு!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தெரிவு செய்வப்படட நாடு!

உலகை உலுக்கிவரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்றதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் சர்வதேச ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.

அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிறேசில், பிரித்தானியா போன்ற சில நாடுகளில் அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்திவருகின்றது.

தற்போதுவரை பாதிப்பு பட்டியலில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. உயிரிழப்புக்களிலும் சரி தொற்று வீதத்திலும் சரிய ஏனைய நாடுகளை விட அமெரிக்காவே அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மக்கள் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கப்போவதை விட வறுமையால், பட்டினியால் அதிகம் உயிரிழக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஏழை மக்களைக் கொண்ட நாடு என்ற நிலையிலிருந்து இந்தியா, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருவதாக உலக வங்கி முன்னர் பாராட்டியிருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட 2 மாத ஊரடங்கு சட்டமானது இதை தலைகீழாக மாற்றியமைத்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

India news: India Inc seeks stimulus to tackle coronavirus

தொற்றுநோய் துயரங்களை விட ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார துயரங்கள் அதிகம். இதனால் உள்நாட்டில் 80% க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் வருமான வீழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள்.

இவர்களில் பலருக்கு உதவி கிட்டாமல் போனால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments