28.2 C
Jaffna
Monday, July 13, 2020
Home Sports Outdoor எப்போதும் டோனியின் கலந்துரையாடல் நேரம் எவ்வளவு தெரியுமா?

எப்போதும் டோனியின் கலந்துரையாடல் நேரம் எவ்வளவு தெரியுமா?

எம்எஸ் டோனி எப்போதும் கடைசி 2 நிமிடம்தான் டீம் மீட்டிங் நடத்துவார் என கிரிக்கெட் வீரர் பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
டோனியுடனான அனுபவங்கள் குறித்து பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்தீவ் பட்டேல்,‘‘டோனி கடைசி 2 நிமிடங்களில்தான் அணியின் கூட்டத்தை நடத்துவார்.2008-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கூட கடைசி இரண்டு நிமிடத்தில்தான் கூட்டத்தை நடத்தினார்.
               அவர் 2019-ம் இறுதிப் போட்டியிலும் அப்படித்தான் அணியின் கூட்டத்தை நடத்தியிருப்பார் என உறுதியாகக் கூறுகிறேன்.டோனிக்கு தெளிவாகத் தெரியும்,எந்த வீரரிடம் இருந்து என்ன வேண்டும் என்று’’ என்றார்.
எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய பார்தீவ் பட்டேல் 302 ரன்களை குவித்தார்.
2010-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர்,பின்னர் கொச்சி டஸ்கர்ஸ், டெக்கான் சார்சர்ஸ்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.ஆனால் இன்னும் தான் டோனி மீது அதே மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்

0 Reviews

Most Popular

800 படத்துக்கான விளக்கமளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி,கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில்...

திருமண அறிவிப்பை வெளியிட்ட ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான்...

உண்மையை ஏற்றுக்கொண்ட கவுதம் கம்பிர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்...

சீன விஞ்ஞானி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக...

Recent Comments