29.1 C
Jaffna
Sunday, September 6, 2020
Home Lifestyle Food KFC சிக்கன் செய்யும் எளிய முறை!

KFC சிக்கன் செய்யும் எளிய முறை!

KFC சிக்கன் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் விரும்பி சாப்பிடுவாரக்ள்.இத்தகைய KFC சிக்கனை வீட்டிலேயே மிகவும் எளிதில் சமைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • லெக் பீஸ் – ஒரு கிலோ
  • ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு
  • மைதா மாவு – 3/4 கப்
  • சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்
  • டொமேடோ சாஸ் – ஒரு ஸ்பூன்
  • ஓட்ஸ் – ஒரு கப்
  • சோள மாவு – 1/4 கப்
  • தேவையான அளவு – உப்பு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
  • மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
  • முட்டை – ஒன்று
  • கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
  • மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை:

  • இப்பொழுது ஒரு கிலோ லெக் பீசை சுத்தம் செய்து கீறிவிடவும்.
  • கீறிய பின்பு ஒரு சுத்தமான பாத்திரத்தில் இந்த லெக் பீஸை எடுத்து கொள்ளவும்.
  • பின்பு அவற்றில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விடவும்.
  • பிறகு 1/4 கப் சோள மாவு மற்றும் 3/4 கப் மைதா மாவு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
  • பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள்,ஒரு ஸ்பூன் சோயா சாஸ்,ஒரு ஸ்பூன் டொமேடோ சாஸ்,ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • கலவையை நன்கு பிசைந்த பின்பு ஒரு மணி நேரம் வரை ப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும்.
  • ஒரு மணி நேரம் கழித்த பின்பு லெக் பீஸை எடுத்து ஓட்ஸில் நன்றாக டிப் செய்து கொள்ளவும்.
  • இதே போன்று அனைத்து லெக் பீசையும் ஓட்ஸில் டிப் செய்து எடுத்துக்கொள்ளவும்.
  • பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஓட்ஸில் டிப் செய்து வைத்துள்ள Chicken லெக் பீசை எண்ணெயில் போட்டு பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்.அவ்வளவுதான் சுவையான KFC சிக்கன் தயார்…

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments