28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home Lifestyle Health வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

வெந்தயத்தில் நீர்ச்சத்து,புரதச்சத்து,கொழுப்பு சத்து,மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.மேலும் சுண்ணாம்பு சத்து,மணிச்சத்து,இரும்புச்சத்து,சோடியசத்து, தயாமின்,பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும்,ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம்,வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

  • இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
  • வெந்தயம்,கடுகு,பெருங்காயம்,மஞ்சள்,இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.
  • விரைவில் விந்து வெளியேறும் பிரச்சினை இருக்கக்கூடிய ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரிப்பதால் பிரச்சினைகள் நீங்கும்.
  • இட்லி அரிசி,1/2 குவளை வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன்னிறத்தில் இருக்கும்.வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை தரும்.
  • அமினோ ஆசிட் இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதால் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
  • மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு,பொருமல் நீங்கும்.
  • மாதவிலக்கு ஒழுங்கற்று காண்பது,மாதவிலக்கின் போது வயிற்றுவலி,இடுப்பு வலி ஏற்ப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சக்கரை கலந்து சாப்பிடலாம்.
  • தேங்காய் எண்ணையில் வெந்தயம்,கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன்,பொடுகு ஒழியும்.பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன்,பொடுகு தீரும்.
  • மலசிக்கல்,உடல் சூடு மற்றும் உடல் சூடால் ஏற்படும் நோய்கள் நீங்க இரவில் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் சிறிதளவு வெந்தயத்தை போட்டு மூடிவிட்டு, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு அதன் நீரையும் குடித்து வந்தால் தீரும்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments