28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home News தொண்டமானின் மகனின் செயலால் ஜனாதிபதி விரக்தி!

தொண்டமானின் மகனின் செயலால் ஜனாதிபதி விரக்தி!

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இறுதி சடங்கு தொடர்பான சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், அதிருப்தியடைந்த ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்துமாறும், உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பில் இருந்து தொண்டமானின் பூதவுடல் வேவல்டனிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன்போது அங்கு பெருந்திரளான மக்கள் கூடியதுடன், பூதவுடல் பேரணியாக எடுத்துச் சென்றபோது ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்களை அவதானித்த கோட்டாபய, கோபமடைந்ததுடன், இறுதிக் கிரியைகளில் அரசியல் பிரசாரங்களை நிறுத்துமாறும் உத்தரவைப் பிறப்பித்ததாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமைச்சர் ஆறுமுகம் தொண்டாமானின் மகன் ஜீவன் தொண்டமான் தேர்தல் சட்டங்களையும் தனிமைப்படுத்தல் சட்டங்களையும் மீறியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸாரும் இது குறித்து அலட்சியமாகயிருப்பதாகவும் மௌனம் சாதிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

ஜீவன் தொண்டமான் நுவரேலியாவில் தனது தந்தையின் பூதவுடல் ஏற்றப்பட்ட வாகனத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என சி.எம்.ஈ.வியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

26 year old Jeevan Thondaman to contest from SLPP in place of his ...

இந்நிலையிலேயே மக்கள் நலனே தனக்கு முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபயவும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஆறுமுகன் தொண்டனின் மரண ஊர்வலங்களின் போது அவரின் மகன் ஜீவன் தொண்டமான் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் செயற்படுவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments