28.2 C
Jaffna
Monday, September 21, 2020
Home News சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மிரட்டல் !

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மிரட்டல் !

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் கட்சியில் உள்ள ஒருவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கவை தொலைபேசியில் மிரட்டியதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஆறுமுகன் தொண்டமானின் தரப்பினர் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் புறக்கணித்துள்ளனர் அமைச்சரின் மறைவிற்கு பின்னர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளிற்கு எதிராக மக்கள் அணிதிரளவேண்டும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் காரணமாக நாட்டில் இரண்டாவது சுற்று கொரோனா ஆபத்து ஏற்படலாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறுதிசடங்குகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்ததால் சட்டநடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு தரப்பினரும் பாரியசேவையை ஆற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் பல குடும்பங்களால் தங்கள் குடும்ப உறுப்பினர்களிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாத நிலையேற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிசடங்குகளை 24 மணிநேரத்திற்குள் மிகக்குறைந்தளவானவர்களுடன் நடத்தவேண்டும் என்ற விதிமுறை காரணமாக இவ்வாறான நிலை நாட்டில் காணப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அமரர் ஆறுமுகனின் உடல் நாட்டின் ஐந்து இடங்களிற்கு எடுத்துச்செல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதன் மூலம் பிழையான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில்ஜசிங்க மிரட்டப்பட்டமை குறித்தும் அவர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments