28.7 C
Jaffna
Thursday, September 24, 2020
Home Lifestyle Food பச்சையாக கேரட்டை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

பச்சையாக கேரட்டை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

பச்சையாகவே உண்ணும் அளவிற்கு சுவை மிக்கது கேரட். அதுமட்டுமல்லாமல் அனைத்து சத்துக்களும் விரயம் ஆகாமல்  கிடைக்கிறது.

காரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களுக்கு பீட்டா-கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைப்பதால் கண்களில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு,வயதான காலத்திலும் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்க உதவுகிறது.

கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டதாகும்.ரத்தத்தைச் சுத்திகரித்து,விருத்தி அடையச் செய்கிறது.குடல்புண்கள்,வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.மார்பகப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்க வழிசெய்கிறது.

நார்ச்சத்து மிகுந்த கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உணவில் நார்ச்சத்து தேவை பூர்த்தியாகி,செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

பச்சையான கேரட்டை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு பற்களில் நுண்கிருமிகள் படிவதைத் தடுத்து,பற்சொத்தை,பற்களின் எனாமல் வலுவிழப்பது போன்ற குறைபாடுகளை நீக்கி ஈறுகளை பலப்படுத்துகிறது.

கேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள்,உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

பித்தக் கோளாறுகள்,புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழிக்கும்.சருமத்திற்கு பொலிவு தந்து,எலும்புகளை வலுப்படுத்துகிறது.உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments